Wednesday 27 June 2012

குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஓர் அதிசயமான உண்மை என்னவென்றால், பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்வாக இருக்கவில்லை என்பதுதான். எந்த ஒருவரது தகுதியையும் வாய்ப்பையும் வழக்கமான சதிக் கோட்பாடுகள் குலைத்துவிடும். இந்நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் பிரணாப் முகர்ஜி அனைவரிடமும் நம்பிக்கை ஏற்படுத்துபவராகவும், எதிர்க்கட்சிகளிடமும் நடுநிலையாகச் செயல்படுபவராகவும் ஒரு நிலையான சக்தியாக விளங்கி வந்திருக்கிறார்---சுந்திரப் பிரதேசத்தில் என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள். தற்போதைய சூழலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. எனினும் இந்த வெற்றிக்கு சி.பி.ஐ.யும், ஜெகன்மோகன் கைது, சிறை உள்ளிட்ட நாடகங்களும் தான் காரணம் என்றே நான் நினைக்கிறேன். விஷயம் தெரிந்தவர்கள் ஜெகன்மோகன் ரெட்டி எம்.பி.யின் சொத்துக்கள் கண்டு மலைக்கின்றனர். ஆனால், எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவரிடமும் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது. நானும், அரசியல் போட்டிகளை அரசியல் ரீதியாகத் தான் அணுக வேண்டும்; சி.பி.ஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவற்றைக் கொண்டல்ல என்று நான் பலமுறை எழுதிச் சலித்துவிட்டேன்.குலாம் நபி ஆசாத்தும் வயலார் ரவியும் மந்திரவாதிகளல்ல. தவிர, ஆந்திர மாநில காங்கிரஸ் குழுவுக்கு என்ன ஆனது? மாநிலத்தில் வெல்ல முடியாதபோது, அம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது? எதிர்காலத்துக்கான அரசியல் விளையாட்டு முன்கூட்டியே துவங்கிவிட்டது. இதன் காரணமாக பிரணாப் முகர்ஜிக்கு கூடுதல் ஆதரவு கிட்டும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.BY..dinaman.

No comments:

Post a Comment